Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

வெள்ளை வான் அச்சுறுத்தலை கண்டித்து சத்தியாக்கிரக போராட்டம்

In இலங்கை
Updated: 06:34 GMT, Jun 17, 2017 | Published: 05:50 GMT, Jun 17, 2017 |
0 Comments
1099
This post was written by : Risha
sathya

எதிர்வரும் காலங்களில் வெள்ளை வான் கடத்தல், விசாரணைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இன்றி நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பில் தனிநபரொருவர் சத்தியாக்கிரக போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னாலுள்ள சின்னப்பிள்ளையார் கோயிலில் அமர்ந்தவாறு குறித்த நபர் நேற்று முதல் (வெள்ளிக்கிழமை) மேற்படி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.

முன்னாள் மனித உரிமை செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான ஏறாவூர் எல்லை நகரைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சுப்பிரமணியம் கமலேஸ்வரன் என்பவரே இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதித்துள்ளார்.

தனது போராட்டத்திற்கான காரணம் குறித்து விளக்கிய அவர், வெள்ளை வேன் கடத்தலுக்குப் பயந்து கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்றிருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நாடு திரும்பியதாகவும், நாட்டை வந்தடைந்த போது குற்றவாளி தோரணையில் தாம் விசாரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேற்படி விடயத்தை சமாதான ஐக்கிய செயற்பாட்டாளரும், நல்லாட்சியின் முக்கிய சூத்திரதாரியுமான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலேயே இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.