Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

மில்கோ நிறுவனம் தனியார் வசமாகும்ஆபத்து: சீ.பி.ரத்நாயக்க

In இலங்கை
Updated: 11:36 GMT, Jun 19, 2017 | Published: 10:41 GMT, Jun 19, 2017 |
0 Comments
1070
This post was written by : Ravivarman
download (3)

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மில்கோ நிறுவனம் தனியார் வசமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார ஆய்வுப்பிரிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரியை 45 ரூபாய் வரை குறைத்துள்ளதுடன் தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்பட்ட பாலை விலைக்கு வாங்காமல் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பாலைப் பெறும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.

தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்கும் கடந்த அரசாங்கத்தில் நான் கால்நடை அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் போது நடவடிக்கை எடுத்திருந்தேன்.

எனவே அரசாங்கம் மில்கோ நிறுவனத்தை நஷ்டமடையச்செய்து, அதனைக் காரணமாக காட்டி அந்நிறுவனத்தை விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தையே மேற்கொண்டு செல்கின்றது. இதனால் தேசிய பால் உற்பத்தியாளர்கள் பாரியளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்” என சீ.பி.ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.