Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணியை விழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்!

In கிாிக்கட்
Updated: 13:44 GMT, Jul 4, 2017 | Published: 04:21 GMT, Jul 3, 2017 |
0 Comments
1270
This post was written by : Vithushagan

சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 11 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

North Sound இல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி  50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

ஏற்கனவே இடம்பெற்ற 3 போட்டிகளில் 2 இல் இந்திய அணி வெற்றி பெற்றதுடன், ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இதன்படி, ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற ரீதியில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை 5  விக்கெட்களை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்  அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் பெற்றுக்கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg