Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அசாமில் வெள்ளத்தில் சிக்கி மேலும் இருவர் உயிரிழப்பு: 3.5 லட்சம் மக்கள் பாதிப்பு

In இந்தியா
Updated: 06:24 GMT, Jul 4, 2017 | Published: 06:23 GMT, Jul 4, 2017 |
0 Comments
1271
icon_com
This post was written by : Elakkiya
flood-in-assam_4ff46740-6075-11e7-89bd-50891d422d4c

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லகிம்பூர் மாவட்டத்தில் வீட்டினுள் புகுந்த வெள்ள நீரில் மூழ்கி இரண்டரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று சந்த்ராபூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரழந்துள்ளதாக அசாம் மாநில அனர்த்த முகாமைத்துவ ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

வெள்ளப்பெருக்கினால் அசாம் மாநிலத்தின் லக்கிம்பூர், ஜோர்கட், கோலாஹட் உள்ளிட்ட 13 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 3.55 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அசாம் மாநில அனர்த்த முகாமைத்துவ ஆணைய தகவல்களின் பிரகாரம், 740 கிராமங்கள் நீரில் முற்றாக மூழ்கியுள்ளதாகவும் 15 ஆயிரம் ஹெக்டேயர் விவசாய நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கவுதாத்தியில் மாத்திரம் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg