Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் புதிய சட்டம் தமிழக மீனவர்களுக்கு எதிரானது: வைகோ

In இந்தியா
Updated: 07:54 GMT, Jul 8, 2017 | Published: 07:53 GMT, Jul 8, 2017 |
0 Comments
1345
This post was written by : Surenth

இலங்கை அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமூலம் தமிழக மீனவர்களுக்கு எதிரானது எனவும் அதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். குறித்த சட்டமூலம் தொடர்பில் அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடியிடம் தான் எடுத்து கூறியதாகவும் அதனை பிரதமர் கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், கச்சதீவு இலங்கைக்குத் தாரை வார்க் கொடுக்கப்பட்டாலும், இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் உரிமை அந்தப் பகுதியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையால் கடந்த காலங்களில் தமிழக மீனர்கள் மீது முன்னெடுக்கப்படும் மனிதாபிமானம் அற்ற செயற்பாடுகள் சர்வசாதாரணமாக மாறியுள்ளது என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் இது போன்ற செயற்பாடுகளை கண்டு கொள்ளாமல் இருப்பதால் தமிழக மீனவர்களின் பிரச்சினை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது என வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg