Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான்கு விருதுகளை தட்டிச்சென்ற ரோஸ்டன் சேஸ்

In கிாிக்கட்
Updated: 05:51 GMT, Jul 10, 2017 | Published: 05:51 GMT, Jul 10, 2017 |
0 Comments
1218
This post was written by : Anojkiyan

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை ரோஸ்டன் சேஸ் தட்டிச்சென்றுள்ளார்.

அத்தோடு ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் மற்றும் வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர் ஆகிய விருதுளை வென்றார்.

பெண்கள் பிரிவில் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை, சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை, சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கனை ஆகிய விருதுகளை ஸ்டெபனி டெய்லர் வென்றார்.

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக ஜேசன் ஹோல்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த ரி-ருவென்ரி கிரிக்கெட் வீரர் விருதை ஆந்ரே ரசல் வென்றார்.

சிறந்த உள்ளூர் வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட் வீரராக அஸ்லே நர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 19 வயதிற்குட்பட்டோருக்கான விருது ஜோஷ்வா பிஷப்பிற்கு வழங்கப்பட்டது.

வாழ்நாள் சாதனையாளர் விருதை கிளிவ்லண்ட் டேவிட்சன் தட்டிச்சென்றார். சிறந்த உள்ளூர் அணியாகவும், சிறந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியாகவும் கயானா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயிலின் அறக்கட்டளைக்கும் விருது வழங்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg