Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டினது குழப்பநிலைக்கு நல்லிணக்கம் கதைப்பவர்களே காரணம்: சிங்கள ராவய

In இலங்கை
Published: 16:21 GMT, Jul 10, 2017 |
0 Comments
1087
icon_com
This post was written by : Ravivarman
33df5a065bb46fb89727a71c91226048_L

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலைக்கு பிரதான காரணம் நல்லிணக்கம் கதைப்பவர்களே என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனாவின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இத குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கும் தொண்டு நிறுவனங்களால் தான் இவ்வளவு குழப்பங்களும் நாட்டில் தோன்றியுள்ளன.
2002 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அன்று செயற்படுத்தி இருந்தால், இன்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி இவ்வளவு குப்பைகளைச் சுமக்கத் தேவையில்லை” என மாகல் கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg