Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூன்று தசாப்தங்களின் பின்னர் இங்கிலாந்துக்கு கிடைத்த பெருமை

In டெனிஸ்
Updated: 04:42 GMT, Jul 11, 2017 | Published: 04:41 GMT, Jul 11, 2017 |
0 Comments
1138
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
tennis-aegon-classic-birmingham-konta-johanna_3315433

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் 33 வருடங்களுக்குப் பின்னர் காலிறுதிக்கு தகுதிபெற்ற இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையை ஜோஹன்னா கோன்டா பெற்றுக்கொண்டுள்ளார்.

லண்டன் நகரில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்று நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதில் பிரான்ஸ் நாட்டின் கரோலின் கார்சியாவை எதிர்கொண்ட கோன்டா, முதல் செட்டை 7(7)- 6(3) என்ற கணக்கில் வென்றார். 2ஆவது செட்டில் கார்சியா 6-4 என வெற்றி பெற்றார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது செட்டில் கோன்டா சிறப்பாக விளையாடி 6-4 என வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

இதேவேளை, அரையிறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை கோன்டா எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg