Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

இணையத்தைக் கலக்கும் ‘பஜாரிப்பெட்டை’

In
Updated: 11:29 GMT, Jul 26, 2017 | Published: 12:31 GMT, Jul 11, 2017 |
0 Comments
1144
This post was written by : Varothayan

மிதுனா, குகனி நடிப்பில் வெளிவந்திருக்கும் புதிய பாடல் ‘பஜாரிப்பெட்டை’. சமீலின் இசையில் வெளிவந்துள்ள இப்பாடலை கே ஜே இயக்கியுள்ளார். பாடல் வெளியாகியது முதல் பலதரப்பட்ட விமர்சனங்களுடன் அதிகளவான பார்வையாளர்களையும் இப்பாடல் பெற்றுள்ளது.

குறும்பட இயக்குனர் வசந்தசீலன் இப்பாடல் குறித்து பகிர்ந்திருக்கும் கருத்துப் பின்வருமாறு : பாடலின் இசை, வரிகள், ஒளித்தொகுப்பு, கதையோட்டம், நடிப்பு இன்னபிற அம்சங்களை குறை கூற முடியாது. நம்மவரின் படைப்புகளில் முன்னேற்றம் தெரிகிறது. கடும் உழைப்பு தெரிகிறது. அவர்களை ஊக்குவிக்க வேண்டியது நமது கடமை. எனது மனமார்ந்த பாராட்டுகள்.

ஆனால் என்னை உறுத்திய சில விடயங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது, பிரதான இரு கதாப்பாத்திரங்களின் தோற்றம் ஈழத் தமிழர் என்ற வகையிலிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. மேக்கப் கொஞ்சம் மிதமிஞ்சிவிட்டதாக எனக்கு தோன்றுகிறது.

இன்னொரு விடயம் இது ஒரு ஈழ கலாசாரத்தை அவர்களின் வாழ்வியல் அம்சங்களில் ஒன்றை முன்வைத்து வெளிக்காட்டியதாக கூற முடியவில்லை. தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் தாராளமாக நடக்கின்றன. அதனை பிரதிபலிப்பதாகவே இது தோன்றுகிறது.

தமிழ்நாட்டு வாழ்வியலையே பார்த்து பார்த்து அலுத்துப் போன எனக்கு நமது ஈழத்து வாழ்வியலை சினிமாவாக பார்க்கும் என் ஆசைக்கு இது தீனி போடவில்லை. மறுபடியும் வாழ்த்துகள்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.