Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊழல் குற்றச்சாட்டில் பிரேசில் முன்னாள் ஜனாதிபதிக்கு தண்டனை உறுதியானது

In உலகம்
Updated: 05:28 GMT, Jul 13, 2017 | Published: 05:28 GMT, Jul 13, 2017 |
0 Comments
1194
icon_com
This post was written by : Risha
lula

ஊழல் மற்றும் பண முறைகேடு குற்றச்சாட்டிற்கு இலக்கான பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாவுக்கு 9 ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவரது பதவிக்காலத்தில் ஊழல் மற்றும் சட்ட விரோதமாக பணப்பறிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இவ்வாறாக வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு நேற்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டது.

லூயிஸ் இனாசியோ லுலா, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
இவரது பதவிக்காலத்தில் ஊழல் மற்றும் சட்ட விரோதமாக பணப்பறிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதன்படி குறித்த வழக்கில் தீர்ப்பு நேற்று வெளியாகிய நிலையில், அவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg