Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் சட்டம் இந்தியாவை பாதிக்காது: பொன். ராதாகிருஷ்ணன்

In இந்தியா
Published: 07:21 GMT, Jul 16, 2017 |
0 Comments
1304
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

இலங்கை அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டமானது அவசியமற்றதென குறிப்பிட்டுள்ள மத்திய இணை அமைச்சர் ராதாகிருஷ்ணன், இச் சட்டம் தமிழக மீனவர்களை பாதிக்காதெனவும், காரணம் இலங்கை மீனவர்களே எல்லை தாண்டுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இரண்டாவது வருட நினைவாக அமைக்கப்பட்டு வரும் மணிமண்டபம் எதிர்வரும் 27ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ள நிலையில், மணிமண்டபம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடற்பரப்பிற்குள் இலங்கை மீனவர்களே அதிகம் எல்லை தாண்டுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டியுள்ள பொன். ராதாகிருஷ்ணன், இதனைக் கருத்திற்கொண்டு இந்திய மீனவர்களின் பிரச்சினையை இலங்கை அரசு மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டுமென மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பரமக்குடியில் இருந்து பாம்பன் பாலம் வழியாக இராமேஸ்வரத்திற்கு விரைவில் நான்கு வழி வீதி அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

abdul kalam (4) abdul kalam (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg