Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவை நீக்கிய முடிவில் மாற்றம் இல்லை: அமைச்சர் ஜெயகுமார் அறிவிப்பு

In இந்தியா
Published: 16:38 GMT, Jul 16, 2017 |
0 Comments
1149
icon_com
This post was written by : Ravivarman
201707161136000244_No-changes-for-Sasikala-remove-in-ADMK-Minister-Jayakumar_SECVPF

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை நீக்குவது தொடர்பான எங்களின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்களை நீக்குவது தொடர்பான எங்களின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் அ.தி.மு.க ஆட்சியும், கட்சியும் செயல்படவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்.

கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தில் சசிகலா, தினகரனை அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. தற்போதுவரை அந்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை.

அ.தி.மு.க.வின் இரு அணிகளை இணைப்பதற்கான முயற்சி நடந்து கொண்டு தான் இருக்கிறது. எங்கள் தரப்பில் எந்த தடையும் இல்லை. ஒரு சிலர் உடன்படாமல் பிரிந்து சென்றாலும் அ.தி.மு.கவை இணைப்பதற்கான முயற்சிகள் தொடரும்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg