Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பா.ஜ.க. துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு?

In இந்தியா
Updated: 11:01 GMT, Jul 17, 2017 | Published: 11:00 GMT, Jul 17, 2017 |
0 Comments
1236
This post was written by : Varshini
venkaiah-naidu_

இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு போட்டியிடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இன்று (திங்கட்கிழமை) மாலை கூடவுள்ள பா.ஜ.க.வின் உயர்மட்ட சந்திப்பில் இறுதி முடிவு எட்டப்படும்.

துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அடுத்த துணை ஜனாதிபதிக்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை நாளைய தினம் நிறைவடையவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, வேட்புமனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் துணை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வரும் நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் பா.ஜ.க.வின் உயர்மட்டக் குழு கூடி கலந்துரையாடவுள்ளது.

இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளருக்கான வாய்ப்பு வெங்கையா நாயுடுவிற்கே அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், இதற்கு வெங்கையா நாயுடு மறுக்கும் பட்சத்தில் வேறு ஒருவர் தெரிவுசெய்யப்படுவார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg