Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட்: முரளி விஜய்க்கு பதிலாக தவான் சேர்ப்பு

In கிாிக்கட்
Updated: 08:07 GMT, Jul 18, 2017 | Published: 04:52 GMT, Jul 18, 2017 |
0 Comments
1392
icon_com
This post was written by : Anojkiyan
dhawan_ap_m

இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முரளி விஜய், இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இவருக்கு பதிலாக மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகார் தவான், அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் வலது மணிக்கட்டில் காயத்துக்குள்ளான முரளி விஜய், அதன் பிறகு நடைபெற்ற எந்த தொடரிலும் பங்கேற்கவில்லை. அத்தோடு இக்காயத்திற்காக இங்கிலாந்து சென்று சத்திர சிகிச்சை மேற்கொண்ட முரளி விஜய்யின் காயம் குணமாகாததால் அவர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.

முன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 26ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg