Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டம் வேண்டும்: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

In உலகம்
Updated: 06:34 GMT, Jul 18, 2017 | Published: 06:34 GMT, Jul 18, 2017 |
0 Comments
1437
This post was written by : Sylviya

இவ்வருட இறுதி வரை பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோவின் பேச்சாளர் ஏர்னெஸ்டோ  தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட கடிதத்தை வாசித்துள்ளார்.

இராணுவச் சட்டத்தின் மூலம் பிலிப்பைன்ஸின் தெற்கில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என, ஜனாதிபதி ரொட்ரிகோ தெரிவித்துள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று பிரிவினைவாத மற்றும் மார்க்ஸிச கிளர்ச்சிகளுக்கு உட்பட்டிருந்த மின்டனானோ (Mindanano) பகுதியில் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி இராணுவச் சட்டம் அமுல் படுத்தப்பட்டது. குறித்த பகுதியில் சுமார் 22 மில்லியன் மக்களின் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸில் மராவி பகுதியில் உள்ள பயங்கரவாதிகளால் சுமார் ஏழு வாரங்களாக விமானத் தாக்குதல்கள் மற்றும் தரை மார்க்க தாக்குதல்கள் என்பன நடத்தப்பட்டன. அதன் விளைவாக குறைந்தது 500 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்க நேரிட்டது.

இந்நிலையில், பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டும் பயங்கரவாதிகளை அழிக்கும் பொருட்டும் இராணுவச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ரொட்ரிகோ வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg