Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறைகளில் கைதிகள் மீது தாக்குதல்: விளக்கமளிக்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

In இந்தியா
Updated: 06:03 GMT, Jul 19, 2017 | Published: 06:03 GMT, Jul 19, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Elakkiya
behind bars_0_0_0_0

கர்நாடக சிறைகளில் கைதிகள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளிக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர், பல்லாரி, பலகேவி மற்றும் தவனங்கேர் சிறைகளிலுள்ள கைதிகள் 32 பேர் கடந்த 16 ஆம் திகதி கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் இரவோடு இரவாக வேறு சிறைக்கு மாற்றப்பட்டதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள் இருவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சசிகலாவுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இத்தகைய தாக்குதல் சம்பவம் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

 

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg