Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘மாம்’ திரைப் படத்தின் வெற்றிக்கு கைகொடுத்துள்ள ஸ்ரீதேவியின் நடிப்பு

In சினிமா
Published: 11:03 GMT, Jul 20, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Kemasiya
sridevis_mom

‘மாம்’ திரைப்படத்தில் ஸ்ரீதேவி ஒரு ஆளுமையுள்ள தாயாக நடித்து, மீண்டும் நடிப்பில் ரசிகர்களை கவரும் நாயகியாக திகழ்கின்றார். இவரின் நடிப்பு தற்போதைய முன்னணி நடிகைகளை பின் தள்ளுவதாக அமைந்துள்ளதுடன், ‘மாம்’ படத்தின் வெற்றியில் அதிக பங்கு வகித்துள்ளது.

அத்துடன் ஸ்ரீதேவியின் நடிப்பு, ‘ரவி உத்யவார்வின் இயக்கம், படத்தின் கதை நகர்வு, வசனங்கள், என மாம் திரைப்படத்தின் அனைத்து பக்கங்களும் படத்திற்கு சிறப்பு கொடுத்துள்ளன.

இந்த நிலையில், பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வன்முறைகளை ஆக்ரோசமின்றி சற்று பொறுப்புடன் நகர்த்திச் செல்கின்றார் இயக்குனர். குறித்த படத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்நாளில் எற்படும் விளைவுகளை, அவற்றையும் தாண்டி அந்த பெண்ணின் வாழ்க்கை புதுப்பிக்கப்படும் விதத்தினை மென்மையாக நகர்த்தி செல்கின்றார் இயக்குனர ரவி உத்யவார்.

அத்துடன் மகளின் பாசத்தில் மூழ்கிய சராசரித் தாயாகவும், மகளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியவர்களை தந்திரமாக கண்டறிந்து மோசம் கட்டும் ஆக்ரோஷ தாயாகவும், இரு முகங்களில் ஸ்ரீதேவி வலம்வருகின்றார்.

மேலும் குறித்த படத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்ணின் முடங்கிப்போகும் வாழ்க்கை, அந்த வாழ்வில் இருந்து மெல்ல  தேறும் பெண்ணின் நிலை என்பவற்றை காட்சிப்படத்தும் மென்மையும், படத்தின் சாதாரணமான வசனநடைகளும், படத்தை ரசிக்க வைக்கின்றது.

அத்துடன் வழக்கமான நமது தமிழ் சினிமாக்களின் காட்சிப்படுத்தலில் இருந்து சற்று விலகிநிற்கும் இயக்குனரின் மன நிலை,  இத்தனை வருடங்களுக்கு பின்னர் மீண்டு நடிப்பில் இறங்கி தற்காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி நடிப்பை வெளிப்படுத்தும் ஸ்ரீதேவியின் நடிப்பு படத்தின் வெற்றி எனலாம்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg