Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ள தமிழ் பாடசாலைகளின் பிரச்சினை

In இலங்கை
Published: 07:48 GMT, Jul 21, 2017 |
0 Comments
1198
icon_com
This post was written by : Risha

தென் மாகாண தமிழ் பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அம்பாந்தாட்டை துணை தூதுவர் பிரேம் கே. நாயர் தெரிவித்துள்ளார்.

தென் பகுதியின் தெனியாய பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நேற்று (வியாழக்கிழமை) அவர் விஜயம் செய்திருந்த நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தெனியாய பகுதியிலுள்ள தமிழ் பாடசாலைகளை சென்று பார்வையிட்ட அவர், பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளையும், ஆசிரியர்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்துக் கொண்டார்.

அத்துடன், பாடசாலையின் நூலகத்திற்கு ஒரு தொகை புத்தகங்களையும் நன்கொடையாக வழங்கிவைத்தார்.

அதனை தொடர்ந்து, தென் மாகாண சபையின் கலாசார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வீரசுமனவீரசிங்க தமிழ் பாடசாலைகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் துணை தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.

in (3) in (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg