Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்: வைகோ

In இந்தியா
Published: 04:43 GMT, Jul 27, 2017 |
0 Comments
1366
icon_com
This post was written by : Elakkiya

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் கடந்த 2006 ஆம் ஆம் சேர்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குறித்த பட்டியலில் இருந்து நீக்கி ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளமையால் உலகெங்குமுள்ள தமிழர்களுக்கு நீதி கிடைத்துள்ளது என வைகோ தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய உயர் நீதிமன்றில் தீர்ப்புக்கு மு.க. ஸ்டாலின், நெடுமாறன், திருமாவளவன் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg