Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி தேர்தல் உத்தேச அட்டவணையை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

In இந்தியா
Updated: 05:16 GMT, Jul 27, 2017 | Published: 05:14 GMT, Jul 27, 2017 |
0 Comments
1367
icon_com
This post was written by : Elakkiya
Chennai_High_Court-09

உள்ளூராட்சி தேர்தல் உத்தேச அட்டவணையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை விசாரித்த நீதிமன்றம் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உள்ளூராட்சி தேர்தலை இரத்து செய்து உத்தரவிட்டது.

அத்துடன், டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறும் அதுவரை உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு தனி அலுவலரை நியமிக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் மேற்படி உத்தரவை ஏற்றுக் கொள்ளாத மாநிலத் தேர்தல் ஆணையகம் தமிழக அரசு சார்பில் மேன்முறையீடு செய்தது

குறித்த மேன்முறையீட்டு மனு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு ஒத்திவைப்பதாகவும் அன்றைய தினமே உள்ளூராட்சி தேர்தலுக்கான உத்தேச கால அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg