Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேவையற்ற போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் மிக கடுமையாக செயற்படும் !

In இலங்கை
Published: 12:40 GMT, Jul 28, 2017 |
0 Comments
1537
icon_com
This post was written by : Vithushagan

ஏற்றுக்கொள்ளக்கூடிய தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி வேறு அரசியல் காரணங்களுக்காக தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்தால் அதற்கு எதிராக அரசாங்கம் கடுமையாக செயற்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தேவையற்ற போராட்டங்களை முன்னெடுத்தால் நாட்டில் அமுலில் உள்ள அனைத்து சட்டங்களையும் பயன்படுத்தி அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காகவே மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களித்துள்ளதாகவும் அதற்கமைய பொது மக்களின் சொத்துக்களை பாதுக்க வேண்டியது அரசின் கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று அத்தியவசிய பொதுச் சேவை சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது கூட்டு எதிரணி கலகம் ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டதாகவும் அதனை ஏற்றுகொள்ள முடியாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எனவே , இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அமைச்சர் என்ற வகையில் கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg