Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பன்னீர் செல்வத்தின் வீட்டருகே வெடிகுண்டு? விசாரணைகள் தீவிரம்

In இந்தியா
Published: 05:32 GMT, Jul 29, 2017 |
0 Comments
1365
icon_com
This post was written by : Puvanes
panneer_selvam001

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டுக்கு அருகே வெடிகுண்டு எனச் சந்தேகிக்கப்பட்ட பொருள் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம், பன்னீர் செல்வத்தின் வீட்டுக்கு அருகே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பொலிஸாரும், வெடிகுண்டு நிபுனர்களும் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்து தீவிர பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, வெடிகுண்டு எனச் சந்தேகிக்கப்படும் ஒரு பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த பொருள் அபாயகரமான நாட்டு வெடிகுண்டு என வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் தெரிவித்துள்ளதாகவும், அப்பகுதில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் அடிப்படையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg