Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

50 ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ள புஜாரா

In கிாிக்கட்
Published: 10:38 GMT, Jul 31, 2017 |
0 Comments
1493
icon_com
This post was written by : Varothayan
cheteshwar-pujara-1427900865

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர டெஸ்ட் வீரரான புஜாரா, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெறும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதன் மூலம், தனது 50 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.

இதன் மூலம் 50 ஆவது டெஸ்டில் விளையாடும் 31 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுகின்றார். 29 வயதான புஜாரா 2010 ஆம் ஆண்டு டெஸ்டில் அறிமுகம் ஆனார். இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 83 இன்னிங்ஸ்களில் 3,906 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (சராசரி 52.18)

இவற்றுள் 12 சதமும், 15 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 206 ஓட்டங்களை இங்கிலாந்துக்கு எதிராக அஹமதாபாத்தில் வைத்துப் பெற்றுள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற இலங்கையணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இவர் சதமொன்றைப் (153) பெற்றுக்கொண்டார்.

‘இந்தியக் கிரிக்கெட்டின் தூண்’ என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில், அவர் களமிறங்கும் 3 ஆவது இடத்தில் களமிறங்கி இந்தியக் கிரிக்கெட் அணியின் நம்பிக்கையையும் கோடிக்கணக்கான இந்திய அணி விசிறிகளின் நம்பிக்கையையும் நிறைவேற்றி வருகின்றார் புஜாரா என்று சொன்னால் அது மிகையாகாது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg