Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அல்கொய்தாவால் டெல்லியில் பரபரப்பு

In இந்தியா
Updated: 09:15 GMT, Aug 10, 2017 | Published: 06:08 GMT, Aug 10, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Puvanes
al_qaeda001

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் இன்று காலை டெல்லியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பயங்கரவாதி நேபாளத்திற்குச் தப்பி செல்ல முயற்சி செய்வதாக டெல்லி பொலிஸாருக்கு உளவுத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஜாகீர் முஷா பேக்ஸான் எனப்படும் அமைப்பினைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, அண்மைக்காலமாக காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் அல்கொய்தாவின் உறுப்பினர் ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக தனிக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg