Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யால தேசிய வனவிலங்கு பூங்கா மூடல்!

In இலங்கை
Updated: 04:06 GMT, Sep 1, 2017 | Published: 04:06 GMT, Sep 1, 2017 |
0 Comments
1215
This post was written by : Ravivarman

யால தேசிய வனவிலங்கு பூங்காவை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இரண்டு மாதங்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி வறட்சிநிலை காரணமாக சரணாலயத்தின் வனவிலங்குகளின் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காகவே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி பிரதேசத்தில் வனவிலங்குகளிற்காக செயற்கை நீர்நிலைகள் அமைக்கப்பட்டும், தண்ணீர் பவுஸர்கள் மூலம் நீர்விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் வறட்சி நிலையினால் யானை போன்ற வனவிலங்குகள் மக்களின் குடியிருப்புப் பிரதேசங்களுக்குள் பிரவேசிப்பதால் அப்பரதேச மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg