Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

உண்மையை கூற பொன்சேகா தயங்கக் கூடாது: சம்பந்தன்

In இலங்கை
Updated: 09:23 GMT, Sep 4, 2017 | Published: 05:38 GMT, Sep 4, 2017 |
0 Comments
1256
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
140908105812_r_sampanthan_tna_lanka_640x360_bbc_nocredit (1)

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில், நீதிமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய போர்க்குற்றமிழைத்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜகத் ஜயசூரிய போர்க்குற்றம் இழைத்தமைக்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தை வரவேற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

போர்க்குற்றம் தொடர்பான ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ள நிலையில், அவற்றை தயக்கமின்றி நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டுமென சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg