Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனோரின் உறவுகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

In இலங்கை
Updated: 06:42 GMT, Sep 5, 2017 | Published: 06:41 GMT, Sep 5, 2017 |
0 Comments
1260
This post was written by : Puvanes

காணாமல் போனோரின் உறவுகளின் பிரதிநிதிகள் நாளைய தினம் கொழும்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

ஏற்கனவே காணாமல் போனோரின் உறவுகளை சந்திப்பதாக ஜனாதிபதி உறவுகளிற்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம் நாளை ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பில், வடக்கின் சகல மாவட்டத்திலும் இருந்து பிரதேச செயலாளர் பிரிவுகள் மூலம் தலா ஒருவர் வீதம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.

பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் இதற்காக மாவட்டச் செயலகங்களின் ஏற்பாட்டில் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களிற்கான தேர்வு மற்றும் பயண ஒழுங்குகள் அனைத்தும் மாவட்டச் செயலகங்கள் மூலமாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த 200 நாட்களாக தமது உறவுகளின் நிலையைத் தெரிவிக்குமாறு கோரி யாழ் மருதங்கேணி, கிளிநொச்சி, முல்லைத்தீவு , வவுனியா ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தி வரும் சூழலில் குறித்த சந்திப்பு இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg