Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அல்லாஹ்வின் 50 திருப்பெயர்களின் அர்த்தம் என்ன?

In ஆன்மீகம்
Updated: 07:03 GMT, Sep 5, 2017 | Published: 06:49 GMT, Sep 5, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : Kemasiya
vgfmj mj

இஸ்லாமியர்கள்  அல்லாஹ்கினை  பல்வேறு பெயர்கள் கொண்டு அழைப்பார்கள். குறித்த பெயர்களின் அர்த்தங்கள் பற்றி அறிவீர்களா? அல்லாஹ் என்ற சொல்லின் பின் தொடரும் 50 நாமங்களின் அர்த்தங்கள் இவை தான்.

1. அல்-ரஹ்மான் = அளவற்ற அருளாளன்.

2. அல்-ரஹீம் = நிகரற்ற அன்புடையவன்.

3. அல் மலிக் = மன்னன்.

4. அல் குத்தூஸ் = பரிசுத்தமானவன்.

5. அஸ்ஸலாம் = அமைதி அளிப்பவன்.

6. அல் முஃமின் = அபயம் அளிப்பவன்.

7. அல் முஹய்மின் = பாதுகாவலன்.

8. அல் அஜீஸ் = யாவையும் மிகைத்தவன்.

9. அல் ஜப்பார் = சமநிலையாக்குவோன்.

10. அல் முத்தகப்பீர் = பெருமையுள்ளவன்.

11. அல் காலிக் = படைப்பவன்.

12. அல் பாரி = ஆத்மாவை அமைப்போன்.

13. அல் முஸ்வ்விர் = உருவமைப்போன்.

14. அல் கஃப்ஃபார் = பிழை பொறுப்பவன்.

15. அல் கஹ்ஹார் = அடக்கி ஆள்பவன்.

16. அல் வஹ்ஹாப் = பெருங்கொடையாளன்.

17. அல் ரஸ்ஸாக் = அன்னபானாதி அளிப்பவன்.

18. அல் ஃபத்தாஹ் = வெற்றி அளிப்பவன்.

19. அல் அலீம் = யாவும் அறிந்தவன்.

20. அல் காபில் = கைவசப்படுத்துவோன்.

21. அல் பாஸித் = தாராளமாகக் கொடுப்பவன்.

22. அல் ஹாபில் = தாழச் செய்பவன்.

23. அல் ராஃபிக் = உயர்த்துவோன்.

24. அல் முஇஸ் = மேன்மை அடையச் செய்வோன்.

25. அல் முதில் = இழிவடையச் செய்பவன்.

26. அல் ஸமீஃ = யாவையும் கேட்பவன்.

27. அல் பஸீர் = யாவையும் பார்ப்பவன்.

28. அல் ஹகம் = தீர்ப்புச் செய்வோன்.

29. அல் அதல் = நீதி செய்வோன்.

30. அல் லத்தீப் = பட்சமுள்ளவன்.

31. அல் க(Kh)பீர் = உணர்ந்தவன்.

32. அல் ஹலீம் = அமைதியானவன்.

33. அல் அழீம் = மகத்துவமுள்ளவன்.

34. அல் கபூர் = பாவம் தீர்ப்பவன்.

35. அல் ஷக்கூர் = நன்றி பாராட்டுபவன்.

36. அல் அலிய் = உன்னதமானவன்.

37. அல் ஹஃபீழ் = பேணிக் காப்பவன்.

38. அல் க(K)பீர் = பெரியவன்.

39. அல் முகீத் = பழிப்பவன்.

40. அல் ஹஸீப் = கணக்கு கேட்பவன்.

41. அல் ஜலீல் = மாண்புமிக்கவன்.

42. அல் கரீம் = கொடை கொடுப்போன்.

43. அல் ரகீப் = கண்காணிப்பவன்.

44. அல் முஜீப் = முறையீட்டை ஏற்பவன்.

45. அல் வாஸிஃ = எங்கும் நிலவுகிறவன்.

46. அல ஹகீம் = நுண்ணறிவுடையவன்.

47. அல் வதூத் = உள்ளன்பு மிக்கவன்.

48. அல் மஜீத் = தலைமை தாங்குபவன்.

49. அல் பாஇத் = தட்டி எழுப்புகிறவன்.

50. அல் ஷஹீத் = சாட்சியுடையோன்.

 

vgfmj mj
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg