Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மொன்றியல் குடியிருப்பாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

In கனடா
Published: 09:30 GMT, Sep 8, 2017 |
0 Comments
1188
This post was written by : Anojkiyan
wat

மொன்றியலின் தென்கிழக்கு பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கான வினியோக நீரில் ‘ஈ-கோலி’ என அறியப்படும் கிருமி காணப்பட்டதனையடுத்து, அப்பகுதி மக்களை நீரை கொதிக்க வைத்து குடிக்குமாறு லோங்குவில் நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், தமக்கான நீரை அருந்துவதற்கு குறைந்தது ஒரு நிமிடத்திற்கு முன்னர் அதனை கொதிக்கவைத்து அருந்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதவேளை நீர்க் குளாய்களில் இருந்து நேரடியாக வரும் சுடுநீரை பாத்திரங்கள் கழுவுவதற்கும், குளியல் அறை – கழிவறை பாவனைகளுக்கும், உடைகளைத் துவைப்பதற்கும் நேரடியாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் இதனை கடைப்பிடிக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg