Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூகத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும்: ஜனாதிபதி!

In இலங்கை
Published: 10:23 GMT, Sep 8, 2017 |
0 Comments
1255
This post was written by : Ravivarman
03

சமூகத்தில் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கொதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

திகன, மத்திய மாகாண விளையாட்டு வளாகத்தில் இடம்பெற்ற ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளாா். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுகாதார கல்வி, உளவியல் ஆலோசனைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் உள்ளிட்ட பல துறைகளின் ஊடாக சிறுவர்களை வலுவூட்டுவதற்கு இச்செயற்திட்டத்தின் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்று வருட காலத்திற்குள் இச்செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதுடன், நாடளாவிய ரீதியில் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

வீட்டு வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், குற்றச்செயல்களில் சிறுவர்களை ஈடுபடுத்தல் மற்றும் சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் உள்ளிட்ட இன்றைய சிறுவர் சமூகம் எதிர்நோக்கும் கொடுமைகளிலிருந்தும் அவர்களை மீட்டெடுத்து, பாதுகாத்தல் இந்த செயற்திட்டத்தின் நோக்கமாகும்” என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg