Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அரசியலா?

In இலங்கை
Published: 08:33 GMT, Sep 11, 2017 |
0 Comments
1310
This post was written by : Varshini

அரசியல் தலைவர்களால் நடத்தப்படும் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாதென பொறியியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளதாக, வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மத்திய நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை), அதன் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், தமது சங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக இக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதென்றும், முன்னேற்ற அறிக்கையையும் சமர்ப்பிக்க முடியாதுள்ளதென்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இது அரசியல் சார்ந்த கூட்டம் இல்லை எனவும் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக இடம்பெறும் கூட்டம் என்பதால் அவர்கள் கலந்துகொள்ள வேண்டுமெனவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் குறிப்பிட்டனர்.

அரச உத்தியோகத்தர்கள் இக் கூட்டத்தை நிராகரிப்பதானது, அரச தொழிலை உதாசீனம் செய்வதாகவே கருதப்படும் என்றும் இணைத்தலைவர்கள் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில், அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தினர் கலந்துகொள்ள வேண்டுமென அறிவித்து, கடிதம் அனுப்புமாறு கூட்டத்தில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன், வடக்கு மாகாண மகளிர் விவகார மற்றும் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ஏ.ஜயதிலக மற்றும் அமைச்சின் செயலாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

Vavuniya ddc meeting (3) Vavuniya ddc meeting (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg