Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய தூதுவர்கள் நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

In இலங்கை
Published: 16:13 GMT, Sep 11, 2017 |
0 Comments
1267
This post was written by : Ravivarman

இலங்கைக்கான மூன்று புதிய தூதுவர்கள் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நியமனக் கடிதங்களைக் கையளித்துள்ளனர்.

எஸ்டோனியா குடியரசு, பெரு குடியரசு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களே தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர்.

சிறந்த நட்புறவுகளைப் பேணி வரும் நாடுகள் தமக்கிடையே உறுதியான நீண்ட கால இருதரப்பு உறவுகளை உறுதி செய்வதற்கு பொருளாதார கூட்டுறவை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தூதுவர்களிடம் தெரிவித்தார்.

நட்பு நாடுகளுடன் பலமான பொருளாதார உறவுகளை பேணுவதற்கு இலங்கை விரும்புவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை போன்ற பல துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு புதிய தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாந்து, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Untitled aa

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg