Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய்லாந்தில் குண்டுவெடிப்பு- இராணுவ வீரர் உட்பட இருவர் உயிரிழப்பு

In உலகம்
Published: 09:40 GMT, Sep 14, 2017 |
0 Comments
1243
icon_com
This post was written by : Elakkiya

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் வீதியோர வெடிகுண்டு வெடித்ததில் இராணுவ வீரர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கில் பெரும்பான்மை இனங்களில் ஒன்றான மலே முஸ்லிம்கள் செறிந்துவாழும் மாகாணங்களில் ஒன்றான யலாவில் இன்று (வியாழக்கிழமை) இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இன்றையதினம் இருவேறு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாகவும் முதல் குண்டுவெடிப்பில் எவ்வித சேதங்களும் ஏற்படாத நிலையில் இரண்டாவது குண்டு வெடிப்பில் இராணுவ வீரர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரி ஒருவரும் கிராமத்தவர் ஒருவரும் 18 இராணுவ வீரர்களும் என 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் இடம்பெறும் வன்முறைகளை பொறுத்த வரையில் எவரும் பொறுப்பேற்பதில்லை. இவ்வாறிருக்க இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் இந்த குண்டுவெடிப்பை திட்டமிட்;டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg