Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கெளதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய்!

In சினிமா
Published: 11:57 GMT, Sep 14, 2017 |
0 Comments
1321
icon_com
This post was written by : Vithushagan
1505284923-953

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய படம் ‘என்னை அறிந்தால்’. இந்தப் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்துள்ளார். அவர், மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது அருண் விஜய் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘தடம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பிரபாஸின் ‘சாஹோ’ படத்தில் நடிக்கவுள்ளார். அத்துடன் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கௌதம் மேனன் தற்போது விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்‘ படத்தையும், தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தையும் ஒரே நேரத்தில் இரு படங்களையும் இயக்கி வருகிறார்.

இதில், ‘துருவ நட்சத்திரம்‘ நிறைவடையும் கட்டத்தில் இருக்கிறது. எனவே, அதை முடித்துவிட்டுத்தான் அருண் விஜயை வைத்து  புதிய படத்தை கௌதம் மேனன் ஆரம்பிக்கலாம் என்கிறார்கள்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg