Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாவீரர் துயிலும் இல்லங்களை உயிரியல் பூங்காக்களாக மாற்றவேண்டும்: சிறிதரன்

In இலங்கை
Updated: 16:07 GMT, Sep 16, 2017 | Published: 16:07 GMT, Sep 16, 2017 |
0 Comments
1257
This post was written by : Ravivarman

மாவீரர் துயிலும் இல்லங்களை உயிரியல் பூங்காக்களாக அமைக்கும் செயற்திட்டத்தினை உரிய பிரதேச சபைகளிடம் கையளிக்க ஆவன செய்ய வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாளை மறுதினம் 18 ஆம் திகதி (திங்கட்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், குறித்த ஆலோசனைகளை உள்ளடக்குமாறும் அவர் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை உயிரியல் பூங்காக்களாக அமைக்கும் செயற்திட்டத்தினை அவை அமைந்துள்ள பிரதேச சபைகளிடம் கையளிக்க ஆவண செய்தல் மற்றும் நல்லூர் பின்வீதியில் உள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபி புனரமைக்கும் செயற்திட்டத்தினை யாழ்.மாநகர சபையிடம் கையளிக்கவேண்டும்.

அத்துடன், யாழ்.மாவட்டத்தில் உள்ள தமிழர் வரலாற்றுத் தொல்லியல் ஆதாரங்களை பாதுகாப்பதற்கான செயற்திட்டத்தை முன்வைத்தல் மற்றும் யாழ்.நல்லூர் சங்கிலியன் மனையைப் பாதுகாப்பதற்கான செயற்திட்டத்தை முன்வைத்தல்.

மேலும் யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களின் விளம்பர பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுத்து தூய தமிழில் பெயர் வைத்தல் போன்ற 5 அம்ச ஆலோசனைகளை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முன்வைக்கப்படும் ஆலோசனைகளில் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குறித்த கடிதங்களின் பிரதிகளை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்களான சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கும் அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg