Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட.மாகாணத்தில் குற்றச் செயல்களை தடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்!

In இலங்கை
Updated: 14:04 GMT, Sep 23, 2017 | Published: 11:36 GMT, Sep 23, 2017 |
0 Comments
1355
This post was written by : Ravivarman
DSC_0720 copy

வடமாகாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் வட.மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாந்து, வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபத்து தென்னக்கோன், கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்த்தன, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாந்து, முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கந்தவத்த, மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிறிவர்த்தன மற்றும் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், அந்தரங்க செயலாளர் ஜே.எம்.சோமசிறி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மக்களுக்கு பீதியூட்டும் வகையில் செயற்பட்டு வந்த ஆவா குழுவின் செயற்பாடுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் மதுபோதையில் வீதிகளில் மக்களுக்கு இடையூறு விளைவிப்போர் மற்றும் போதைவஸ்து பாவனையாளர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழ் பேசும் பொலிஸார் குறைவாக காணப்படுவதனால் பணிகளை தமிழ் மொழில் மேற்கொள்வதில் சிரமங்கள் நிலவுவதாகவும் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

மேலும் அனுமதியற்ற வகையில் வீதி ஓரங்களில் இந்து, பௌத்த, கிறிஸ்தவ சமயங்களின் தெய்வங்களை அமைப்பதன் காரணமாக வீண் பிரச்சினைகள் சமூகங்களுக்கு இடையில் எழுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg