Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரோஹிங்கியர்களுக்கு எதிரான வன்முறைக்கு சவுதி கண்டனம்

In உலகம்
Updated: 11:43 GMT, Sep 24, 2017 | Published: 05:38 GMT, Sep 24, 2017 |
0 Comments
1103
icon_com
This post was written by : Suganthini

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான மியன்மார் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே, சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் அடெல் அல் ஜௌபர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறை மற்றும் அவர்களின் இடம்பெயர்வு தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாகவும் கூறியுள்ளார்.

மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவம் காரணமாக பங்களாதேஷில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தஞ்சம் கோரி வருகின்றனர்.

இந்நிலையில், பங்களாதேஷில் 4 இலட்சத்து 22 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg