Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைத்தியர் மீது கத்திக் குத்து: இருவர் கைது

In
Published: 06:52 GMT, Sep 25, 2017 |
0 Comments
1192
This post was written by : Suganthini
arrest

லண்டன், மன்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தை தொடர்ந்து, இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்செஸ்டர் பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு அருகில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில், சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பள்ளிவாசலில் மாலை வேளை தொழுகையை முடித்துக்கொண்டு திரும்பும் வேளையிலேயே, வைத்தியர் மீது கத்திக் குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, வைத்தியரினுடைய கழுத்தின் பின்புறத்தில் கத்திக் குத்து காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸார், 32 மற்றும் 54 வயதுகளையுடைய இரு சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg