Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மேற்கிந்திய தீவுகள் அணியை இலகுவாக வென்றது இங்கிலாந்து அணி

In கிாிக்கட்
Published: 09:39 GMT, Sep 25, 2017 |
0 Comments
1451
icon_com
This post was written by : Surenth
England

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிவரும் நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிரிஸ்டலில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 369 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில், மோயின் அலி 102 ஓட்டங்களையும், ஜோ ரூட் 84 ஓட்டங்களையும், பென் ஸ்டொக் 73 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில், மிகில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜேசன் கோல்டர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

370 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 39.1 ஓவர்கள் நிறைவில், 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ஓட்டங்களை பெற்று 124 ஓட்டங்களால் தோல்வியை தழுவியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில், க்றிஸ் கெய்ல் 94 ஓட்டங்களையும், ஜெசன் மொஹம்மெட் 38 ஓட்டங்களையும், ஜெசன் கோல்டர் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில், லைம் ப்லன்கெட் 5 விக்கெட்டுகளையும், அடில் ராஷிட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg