Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நிறைவேறாத கனவு! – ரொனால்டோவை கலங்க வைத்த ஒரு தாயின் கடிதம்! 

In உதைப்பந்தாட்டம்
Published: 07:57 GMT, Sep 26, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Puvanes
ronaldo001

அண்மையில் மெக்சிகோவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்த சான்டியாகோ பிளோர்ஸ் மோரா எனப்படும் சிறுவனுக்கு காற்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் ரொனால்டோவின் தீவிர ரசிகனாவான். அவன் மரணத்தின் பின்னர் அவனது தாய் ரொனால்வோவிற்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில், “என் மகன் உங்களது தீவிர ரசிகனாக இருந்தான். எங்கேயும் உங்கள் பெயரையே எழுதுவான். இறப்பதற்கு முன்னர் பள்ளிக் குறிப்புப் புத்தகத்திலும் சான்டியாகோ பிளோர்ஸ் மோரா கிறிஸ்டியானோ ரொனால்டோ என்றே எழுதியிருந்தான்”

மேலும், “என் மகனின் கனவும் உங்களை பார்க்க வேண்டும் என்பதே. தற்போது அவன் இறைவனிடம் சேர்ந்து விட்டான். நாங்கள் பண உதவியோ, அல்லது கவனத்தை ஈர்க்கவோ விரும்பவில்லை. ரொனால்டோ அறிய வேண்டியது யாதெனின், மகனது கனவு நிறைவேறவில்லை என்பது மட்டுமே” எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் தொடர்பில், வருத்தமடைந்த ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணிக்காக தான் விளையாடும் ஜெர்சியில் “பாசமிகு என் நம்பர் 1 ரசிகன் சான்டியாகோவிற்காக” என எழுதி தனது வருத்தத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg