Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மோடியின் தவறுகளுக்கு ஜேட்லி உடந்தை: பா.ஜ.க. மூத்த தலைவர் சாடல்

In இந்தியா
Updated: 08:57 GMT, Sep 27, 2017 | Published: 08:56 GMT, Sep 27, 2017 |
0 Comments
1119
icon_com
This post was written by : Risha
yashwant

இந்திய பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு தள்ளிய, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தவறான திட்டங்களுக்கு நிதியமைச்சரும் உடந்தையாக செயற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின் வருகையினால் ஓரங்கப்பட்ட தலைவர்களுள் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா இந்திய நாளிதழொன்றுக்கு எழுதிய கட்டுரையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவில் வறுமை நிலை விளிம்பில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பிரதமர் மோடியும், நிதியமைச்சரும் இணைந்து இந்திய பொருளாதாரத்தை சிதைத்துவிடட்டனர்.

மேலும், இந்திய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கிடைத்த சிறந்த வாய்ப்பை ஜேட்லி தவறவிட்டுவிட்டார். இந்நிலையில், இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த உண்மைகளை இப்போதாவது வெளிப்படுத்தாவிடின், தேசிய கடமையிலிருந்து தவறியவனாகிவிடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg