Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரேமதாசாவைப் போற்றும் அநுராதபுரத் தமிழர்கள்

In
Updated: 10:38 GMT, Sep 27, 2017 | Published: 10:28 GMT, Sep 27, 2017 |
0 Comments
1277
icon_com
This post was written by : elayathambi
ranasinghe-premadasa-2

அநுராதபுரம் நீராவியில் வாழ்ந்து வரும் தமிழர்கள், தொடர்ந்தும் அரசால், தாங்கள் கைவிடப்பட்டு வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர். அநுராதபுர மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசமாக நீராவி என்ற கிராமம் இருக்கிறது. இக்கிராமத்தின் பெயர் தேவநம்பியதீசபுரம் என மாற்றம் பெற்று அது சர்ச்சைக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத் தக்கது. அவ்வாறே அங்குள்ள முத்துமாரி அம்மன் ஆலயமும் இனவாத ஆழுமைக்கும் புறக்கணிப்பிற்கும் உள்ளாகி உள்ளது. அங்கு தமிழர்களாலும் சிங்களவர்களாலும் வழிபடப்பட்ட பிள்ளையார் சிலை 2011 ஆம் ஆண்டு தீயிடப்பட்டமையும் இங்கு சுட்டிக் காட்டத் தக்கது.

pillyar_statue001

இன் நிலையில் இக் கிராமத்திற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் விஜயம் செய்துள்ளார். மறைந்த ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாசாவின் மறைவின் பின்பு தங்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்றும், அவரால் கட்டிக் கொடுக்கப்பட்ட சிறிய வீடுகளிலேயே இப்போதும் தாங்கள் வாழந்து வருவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

02

இந்தியாவில் இருந்து நேரடியாக வந்தவர்களும், மலையகத்திலிருந்து வந்தவர்களுமாக அங்கு 500 குடும்பங்கள் வாழ்கின்றன. வீடுகளோ, வேலை வாய்ப்புக்களோ, அடிப்படைக் கல்வி வசதிகளோ அற்ற நிலையில் புறம் தள்ளப்பட்டவர்களாக தாம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனிடம் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

குறித்த பிரதேச மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார். தனது அதிகார எல்லைக்குள் வரும் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளை முதலில் ஆரம்பிப்பதாக அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg