Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மூதூரில் வயலுக்கு சென்றவர்கள் மீது தாக்குதல்

In இலங்கை
Published: 10:13 GMT, Sep 30, 2017 |
0 Comments
1223
icon_com
This post was written by : Arul Jesu
aaa

மூதூர் கங்குவேலி பகுதியில் வயல் காணிகளை சுத்தப்படுத்த சென்ற மூவர் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிவெட்டி-பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் சிவகுமார் மூதூர்- லேக் வீதியைச் சேர்ந்த ஏ.டபிள்யூ.எம்.ஜிஹாத் மற்றும் மூதூர்- ஆணைச்சேனையைச் சேர்ந்த எம்.ஜ.றிசாத் ஆகியோரே தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவிற்கமைய குறித்த வயல் காணியை சுத்தப்படுத்த இவர்கள் சென்ற போது அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் அவர்களை தாக்கியுள்ளனர்.

எவ்வாறாயினும் தம் மீது சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலரே தாக்குதல் நடத்தியதாக காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg