Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கில் வறிய குடும்பங்களுக்கு மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை

In இலங்கை
Updated: 11:22 GMT, Oct 17, 2017 | Published: 11:21 GMT, Oct 17, 2017 |
0 Comments
1226
icon_com
This post was written by : Elakkiya
2

வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் தனவந்தர்களின் உதவியுடன் மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வறுமைக்கு உட்பட்ட நிலையில் மலசலகூடங்களை அமைத்துக் கொள்ள நிதி வசதியற்றிருக்கும் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் வாழைச்சேனை, ஏறாவூர், ரிதிதென்ன பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரம் குடும்பங்களுக்கே இவ்வாறு மலசல கூடம் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அங்குரார்பண நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், மத்திய கிழக்கு தனவந்தர்கள், நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் றவூப் ஹக்கீம், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் முதலமைச்சரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய அரபு இராச்சிய கொடை வள்ளல்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பல குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்திருந்தனர்.

அதன்பிரகாரமே இந்த உதவித் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

1 (3)3 (3)4

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg