Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய தலைவர்கள் உச்சிமாநாடு- பல்வேறுபட்ட கலந்துரையாடல்களுடன் நிறைவு

In ஐரோப்பா
Updated: 07:38 GMT, Oct 20, 2017 | Published: 07:38 GMT, Oct 20, 2017 |
0 Comments
1266
This post was written by : Elakkiya

பிரெக்சிற், குடியேற்றம், தொழிலாளர் உரிமைகள் மற்றும் ஈரான் அணுசக்தி உடன்படிக்கை போன்ற பரந்தளவிலான பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்களுடன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உச்சிமாநாட்டின் முதல்நாள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்றைய தினமே பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் மற்றும் ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் பணிபுரிவதை அனுமதிக்கும் நடைமுறையை மாற்றியமைக்க மக்ரோங் விரும்புகின்ற நிலையில், தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் ரஜோய் உடனான சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகின்றது.

இதற்கிடையில் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுத்துள்ளார். தடையற்ற வர்த்தகத்திற்கான அவர்களின் பகிரங்க ஆதரவை கோடிட்டு காட்டியதுடன் பாதுகாப்பிற்கு வலுவான பங்காளியாக இருப்பதாகவும் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg