Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இது வீனஸ் ஸ்டைல் – WTA அரையிறுதிக்கு முன்னேற்றம்

In டெனிஸ்
Updated: 06:25 GMT, Oct 27, 2017 | Published: 06:25 GMT, Oct 27, 2017 |
0 Comments
1191
This post was written by : Sujitharan

அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில், அரையிறுதிப் போடடிக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இறுதி குழுநிலைப் போட்டியில், கர்பின் முகுருஜாவை வெற்றி கொண்டதன் மூலம் இவர் அரையிறுதிப் போடடிக்கு முன்னேறியுள்ளார்.

உலக தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகின்றன.

”வய்ட்” பிரிவின் இறுதி குழுநிலைப் போட்டி நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயினின் கார்பின் முகுருஜாவை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், வெற்றிகாக இருவரும் ஒருவரை ஒருவர் அக்ரோஷமாக எதிர்கொண்டனர்.  இருவரும் சமபலத்தை வெளிப்படுத்திய போதிலும், வீனஸ் வில்லியம்ஸின் கரங்களே ஓங்கியிருந்தன.

இந்த போட்டியில், 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற வீனஸ் வில்லியம்ஸ், அரையிறுப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த பிரிவில் பிளிஸ்கோவா, வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg