Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்குமா?

In இலங்கை
Published: 08:18 GMT, Oct 27, 2017 |
0 Comments
1140
This post was written by : Anojkiyan
petr

எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்குமா என்ற கேள்விக்கு, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க கருத்து தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பானது நாட்டின் ஏனைய பொருளாதார நிலைமைகளை கருத்திற்கொண்டே மேற்கொள்ள வேண்டியுள்ளது. தற்போதுள்ள நிலைமையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமானது நட்டத்திலேயே இயங்குகின்றது. இலாபமீட்ட முடியாத நெருக்கடியான நிலைமைக்கு முகங்கொடுக்கின்றபோதும் பகிர்ந்தளிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக விலை­களை அதிகரிக்கும் கோரிக்கையை முன்வைக்கவில்லை.

மேலும் எதிர்காலத்தில் குறித்த திணைக்களங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானமொன்றுக்கு வரவேண்டியுள்ளது. எவ்வாறாயினும் தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எண்ணமில்லை. மேலும் தமது நிறுவனத்துக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 11 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg