Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூசிலாந்தை வீழ்த்த யார் காரணம் – தவான் இப்படி கூறுகிறார்

In கிாிக்கட்
Updated: 09:10 GMT, Oct 27, 2017 | Published: 09:10 GMT, Oct 27, 2017 |
0 Comments
1514
This post was written by : Sujitharan

நியூசிலாந்து அணியை வீழ்த்த முக்கிய காரணமாக விளங்கிய இந்திய வீரர்களை, சக வீரர் ஷிகர் தவான் வாழ்த்தியுள்ளதுடன், புகழாரம் சூட்டியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் வெற்றி பெற முக்கிய பங்கு வகித்த, புவனேஷ்வர்குமார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரையே அவர், புகழ்ந்துள்ளார்.

புனேயில் நேற்று முன்தினம் நடைபெற்ற நியூசிலாந்து அணியுடனான 2வது போட்டியில் வெற்றியீட்டியதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தவான் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

”அதிரடி துடுப்பாட்டம் நிறைந்த இந்த காலத்தில் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில், 230 ஓட்டங்கள் என்பது மிகப்பெரிய ஒரு ஓட்ட இலக்கு அல்ல.

பலம் பொருந்திய துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட நியூசிலாந்து அணியை, இந்திய பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தினர். இதில், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், மிகச்சிறப்பாக பந்து வீசினார். அவர் தற்போது நல்லதொரு நிலையில் விளையாடி வருகிறார்.

அதேபோல், துடுப்பாட்டத்திலும் நாம் சிறப்பான வெளிப்பாடை வெளிப்படுத்தினோம். குறிப்பாக தினேஷ் கார்த்திக் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார். கடந்த காலங்களில் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து, தேசிய அணியில் மீண்டும் இடம்பிடித்த அவர், இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.” என்றும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg