Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவர் மீதும் ஊக்க மருந்து சோதனை!

In கிாிக்கட்
Published: 09:23 GMT, Oct 29, 2017 |
0 Comments
8327
This post was written by : Anojkiyan
dho

இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவர் மீதும் ஊக்க மருந்து சோதனைகளை நடத்தப் போவதாக இந்திய விளையாட்டுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக, இந்திய கிரிக்கெட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளில், அணி வீரர்கள் அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும், படிப்படியாக வெளிநாடுகளில் விளையாடும் இந்திய அணியும் சோதனைக்கு உள்ளாக்கப்படும் என்றும் விளையாட்டுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான பூரண உரிமையையும் அதிகாரத்தையும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகவரகத்துக்கு வழங்கியிருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட வேண்டும் என்று உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு இந்திய விளையாட்டுத் துறை அமைச்சுக்குத் தெரிவித்திருந்தது. இது குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாதவிடத்து, தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகவரத்துக்கான அங்கீகாரத்தை இரத்துச் செய்வதாகவும் அது எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg