Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சி பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்திற்கு எதிராக நடவடிக்கை: அமைச்சர் அனந்தி

In இலங்கை
Published: 15:26 GMT, Oct 29, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Anojkiyan
150 years Canada

சட்டத்திற்கு முரணாக பெரும் தொகை நிதியை அனுமதியின்றி அன்பளிப்புச் செய்த கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு முரணாக பெரும் தொகை நிதியை அனுமதியின்றி அன்பளிப்புச் செய்த விவகாரம் தொடர்பில், அமைச்சர் அனந்தி சசிதரனை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“சங்கத்தின் சட்டத்திற்கு அமைவாக ஜயாயிரம் ரூபா வரை மாத்திரமே அன்பளிப்புச் செய்ய முடியும் அதுவும் உரிய முறைப்படி அனுமதிகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் குறித்த சங்கத்தினர் சட்டத்திற்கு முரணாக எவ்வித அனுமதிகளும் இன்றி தங்களின் விருப்படி சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொள்கின்றனர். எனவே இவர்களின் தொடர்ச்சியான சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் நீதியான முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு சங்கத்தை நம்பியுள்ள தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்” என கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் பாரதிபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு ஐந்து இலட்சத்து இருபது ஆயிரத்து 650 ரூபாவை அன்னதானம் மண்டபம் அமைக்க அன்பளிப்பாக வழங்கியது.

தாங்கள் நாளாந்தம் பனை தென்னை மரங்களில் ஏறி இறங்கி நெருக்கடிகளுக்கு மத்தியில் தொழில் செய்து வருகின்ற போது சஙகம் தங்களது சேம நிதியை இவ்வாறு அன்பளிப்புச் செய்வது கவலையாக உள்ளது எனவும், தங்களின் தொழிலாளர்கள் இன்னமும் பொருளாதார மேம்பாடு அடையாத நிலையிலும், பல தொழிலாளர்கள் நிரந்தர வீடுகள் இன்றி காணப்படுகின்ற போதும் சங்கம் பெரும் தொகை நிதியை அன்பளிச் செய்துள்ளது தொழிலாளர்கள் என விசனம் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg